மாலைதீவு குழப்பம், இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

Maldives

தற்போது உள்நாட்டு அரசியல் குழப்பத்துள் உள்ள மாலைதீவுக்கு இந்தியா தனது இராணுவத்தை அனுப்பினால், சீனாவும் உடனடியாக தலையிடும் என்று கூறியுள்ளது சீனாவின் அரச கட்டுப்பாட்டில் உள்ள Global Time என்ற பத்திரிகை.
.
சீனா மாலைதீவின் உள்நாட்டு அரசியலில் காரணம் இல்லாதவிடத்து தலையிடாது என்றும், ஆனால் ஐ.நா.வின் அனுமதி இன்றி இந்திய இராணுவம் தலையிட்டால், சீனா பதில் நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த கட்டுரை கூறியுள்ளது.
.
தற்போது மாலைதீவின் ஆட்சியில் உள்ள ஜனாதிபதி Abdulla Yameen தலைமையிலான அரசுக்கு சீனா பெரும் உதவிகளை செய்து வருகிறது. இலங்கை போல் மாலைதீவும் சீனாவின் கடன்களையும், முதலீடுகளை பெற்று வருகிறது.
.
தற்போது மாலைதீவுக்கு பயணிக்கும் உல்லாச பயணிகளில் 20% பயணிகள் சீனர்கள் என்று கூறப்படுகிறது.

.

இலங்கைக்குள் IPKF நுழைய, இலங்கை தமிழ் அகதிகள் இந்தியா தப்பி ஓடியது வழிவகுத்தது. ஆனால் அவ்வாறு மாலைதீவு மக்கள் இந்தியா செல்லாவிடின், இந்தியா தகுந்த காரணம் எதையும் முன்வைக்க முடியாது. Veto வாக்கு கொண்ட சீனா, மாலைதீவு விடயத்தை ஐ.நாவிலும் முறியடிக்கலாம்.

.