மேலும் 60,000 மாயன் கட்டிடங்கள் கண்டுபிடிப்பு

Mayan

முற்காலங்களில் அதி சிறந்து வளர்ந்திருந்த மக்களில் மாயன் (Mayan) மிக முக்கியமானவர்கள். மத்திய அமெரிக்காவின் பல பாகங்களில் மாயன் எச்சங்கள் பல இன்றும் உண்டு. மெக்ஸிக்கோ (Mexico) நாட்டு சிசென் இற்ச (Chichen Itza), ருழும் (Tulum), கோபா (Coba) ஆகிய இடங்கள் தற்போது உல்லாச பயணிகளின் முக்கிய தெரிவுகள். இதுவரை அறிந்த தரவுகளின் அடிப்படையில் சுமார் 2 மில்லியன் மாயன் அவர்களின் உச்ச காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்பட்டு இருந்தது.
.
ஆனால் அண்மையில் LIDAR (Light Detection and Ranging) என்ற அதிநவீன laser உபகரணம் கொண்டு முப்பரிமாண (3D) வரைபடம் அமைத்த ஆய்வு குழு ஒன்று, புதிதாக சுமார் 60,000 மாயன் கட்டிடங்களை குவாட்டமாலா (Guatemala) என்ற நாட்டில் உள்ள Maya Biosphere Reserve பகுதியில் கண்டுள்ளது. மாயன் காலம் 250 ஆம் ஆண்டு முதல் 900 ஆம் ஆண்டு வரையானது. ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கட்டிடங்கள் பல கல் குவியலாகவே காணப்படுகிறதாம்.
.
இந்த தொழில்நுட்பம் அடர்ந்த காடுகளில் உள்ள மரங்களையும், இலைகளையும் ஊடறுத்து, அவற்றுக்கு கீழே உள்ள அமைப்புக்களை முப்பரிமாண வடிவில் காண்பிக்கும்.
.
இந்த பகுதிகள் மிக உயரமான மரங்களை கொண்ட அடர்ந்த காடுகள் என்றபடியால் மக்கள் நடமாட்டம் அற்ற இடங்களாக உள்ளன. அத்துடன் இப்பகுதியில் பல வகை விஷ பாம்புகள், குளவிகள் போன்றவையும் உள்ளன.
.
புதிதாக கண்டுள்ள 60,000 கட்டிடங்களின் தொகை, மீண்டும் கணிக்கப்பட்டுள்ள மாயன் தொகையை 6 மில்லியன் ஆக உயர்த்தி உள்ளது.
.
இந்த கண்டுபிடிப்பு வரும் 6ஆம் திகதி National Geography தொலைக்காட்சியில் ஒளிபரப்படப்படவுள்ளது.
.
படம்: National Geographic
.