பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது, பிரித்தானியாவுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஒரு ஆய்வு கூறியுள்ளது. பிரித்தானிய அரசுக்கென தாரிக்கப்பட்ட இந்த இரகசிய ஆய்வு (confidential report) இன்று திங்கள் பகிரங்கத்துக்கு வந்துள்ளது. பிரித்தானிய அரசும் அவ்வாறு ஒரு அறிக்கை உள்ளதை மறுக்கவில்லை.
.
.
சிறிது காலத்தின் முன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா என்று பிரித்தானிய மக்களிடம் தேர்தல் மூலம் கேட்டிருந்தது. அப்போது மக்கள் வெளியேறுவதை ஆதரித்து இருந்தனர். ஆனாலும் பிரித்தானியா தற்போது முற்றாக பிரிவதற்கு பதிலாக பொருளாதாரத்தில் தனக்கு சாதகமான ஒரு உறவை உருவாக்க விரும்புகிறது.
.
.
“EU Exit Analysis – Cross Whitehall Briefing” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வு பிவருமாறு கருத்துக்களை தெரிவித்து உள்ளது.
.
.
பிரித்தானியா முற்றாக பிரிந்தால், அடுத்துவரும் 15 வருடங்களில் சுமார் 8% பொருளாதார வீழ்ச்சியை அந்நாடு அடையும்.
.
.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறி, ஆனால் தொடர்ந்தும் பொருளாதரத்தில் இணைந்து செயல்பட்டால் பிரித்தானியா 2% பொருளாதார வீழ்ச்சியை மட்டுமே அடையும். தற்போதைய May அரசும் இவ்வகை உடன்படிக்கை ஒன்றை அமைக்கவே முனைகிறது.
.
பிரிந்த பின், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இறுக்கமான பொருளாதாரத்தை கொண்டிருந்தால் பிரித்தானியா பொருளாதார அபிவிருத்தியை அடையும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அதற்கு இணங்கும் என்பது சந்தேகமே.
.
.
பிரிந்த பின், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இறுக்கமான பொருளாதாரத்தை கொண்டிருந்தால் பிரித்தானியா பொருளாதார அபிவிருத்தியை அடையும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அதற்கு இணங்கும் என்பது சந்தேகமே.
.
அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுடன் பிரிந்துபோன பிரித்தானியா பொருளாதார உறவுகளை ஏற்படுத்தினும், அவை ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதாரத்துக்கு நிகர் ஆகாது.
.