Air India விமான சேவையில் 49% உரிமைக்கு முதலிட ஒரு வெளிநாட்டு விமான சேவை முன்வந்துள்ளது என்று இந்தியாவின் விமான சேவை செயலாளர் R . N. Choubey கூறியுள்ளார். நட்டத்தில் இயங்கும் Air India விமான சேவையை தனியார் வசப்படுத்த இந்தியா நீண்ட காலமாக முயற்சி செய்து வந்துள்ளது. ஆனால் தற்போதே ஒரு விண்ணப்பம் கிடைத்துள்ளது.
.
இவ்வாறு 49% உரிமையை கொள்ள விரும்பும் வெளிநாட்டு விமானசேவையின் பெயர் இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை.
.
சிங்கப்பூர் விமான சேவை (Singapore Airlines) முன்னர் Air India சேவையில் முதலிட விரும்பி இருந்தது. 2015 ஆம் ஆண்டுமுதல் சிங்கப்பூர் விமான சேவையும், TATA நிறுவனமும் இணைந்து இயக்கம் Vistara என்ற விமான சேவை Air India சேவையுடன் சந்தர்ப்பமும் இருந்தது.
.
கட்டார் விமான சேவையும் (Qatar Airlines) முன்னர் இந்திய விமான சேவையில் முதலிட விருப்பம் கொண்டிருந்தது.
.
இந்தியாவின் IndiGo விமான சேவையும் இந்திய விமான சேவையில் நாட்டம் கொண்டிருந்தது.
.