சிரியாவில் IS குழு கணிசமாக அழிக்கப்பட்ட நிலையில், அங்கு இப்போது அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையில் மோதல் உருவாக்கக்கூடிய நிலை தோன்றி உள்ளது. அமெரிக்கா வளர்த்த YPG என்ற சிரியா நாட்டு Kurdish குழு மீது அண்மையில் துருக்கி மேற்கொண்டுவரும் இராணுவ தாக்குதலே அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையில் முறுகல் நிலையை உருவாக்கி உள்ளது.
.
IS குழு இருந்தபோது, அவர்களுக்கு எதிராக போராட அமெரிக்கா YPG என்ற ஆயுத குழுவை வளர்த்து இருந்தது. அப்போது YPG குழுவுக்கு அமெரிக்கா பாரிய ஆயுதங்களையும் வழங்கி இருந்தது. YPG குழுவை ஒரு பயங்கரவாத குழுவாக கருதும் NATO நாடான துருக்கி அமெரிக்காவின் கனரக ஆயுத வழங்களை எதிர்த்து. அப்போது அந்த கனரக ஆயுதங்களை YPG குழுவிடம் இருந்து மீள பெறுவோம் என்று கூறி இருந்தது அமெரிக்கா. துருக்கி இப்போது அமெரிக்காவிடம் இணங்கியபடி கனரக ஆயுதங்களை மீள பெறுமாறு கூறுகிறது.
.
அதேவேளை அமெரிக்கா சுமார் 2,000 படையினரை Manbij போன்ற சிரியாவின் Kurdish நிறைந்த பகுதிகளிலும் கொண்டுள்ளது. அவர்களையும் வெளியுறுமாறு கூறுகிறது NATO நாடான துருக்கி.
.
Manbij நோக்கி துருக்கி படைகள் நகரின், அப்படைகள் அங்கு நிலைகொண்டுள்ள அமெரிக்க படைகளுடனும் மோதலாம்.
.
துருக்கியின் தாக்குதல் அகோரத்தை தாங்க முடியாத YPG, தமது முதன்மை எதிரியான சிரிய அரசை உதவிக்கு அழைத்துள்ளது (IPKF காலத்தில் புலிகள் பிரேமதாசாவை உதவிக்கு அழைத்ததுபோல்) .
.