அமெரிக்க படைகளின் தலைமையகமான Pentagon ரஷ்யாவிடம் உள்ள இராணுவ தளபாடங்களை வேவுபார்த்து வகைப்படுத்துவதுண்டு. அவ்வகை ஆவணம் ஒன்று தற்போது பகிரங்கத்துக்கு கசிந்துள்ளது. அவ்வாறு கசிந்த தரவுகளின்படி, ரஷ்யாவிடம் தற்போது கடலுக்கு அடியில் சுதந்திரமாக செல்லக்கூடிய (Autonomous Underwater Vehicle, அல்லது Drone), அணுகுண்டு ஏவுகணை கொண்ட நீர்மூழ்கி உள்ளது புலனாகியுள்ளது.
.
.
2016 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்திருந்த இந்த ஆளில்லா நீர்மூழ்கி 100 மெகா-தொன்னுக்கு நிகரான அணுவாயுதத்தை காவக்கூடியதாம். அவ்வகையில் இதுவே உலகின் மிக பெரிய அணுவாயுதமாகும். Status-6 என்ற அடையாளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக்கு அமெரிக்கா Kanyon என்ற புனைபெயரை இட்டுள்ளது.
.
.
சுமார் 1 km ஆழத்துக்கு செல்லக்கூடிய இந்த ஆளில்லா நீர்மூழ்கி 10,000 km தூரமும் செல்லக்கூடியதாம். தற்போது அமெரிக்காவிடம் உள்ள, ஆளுள்ள நீர்மூழ்கிகள் சுமார் 500 மீட்டர் (0.5 km) ஆழம் வரை மட்டுமே செல்லும்.
.
.
இந்த ‘சேய்’ நீர்மூழ்கியை Oscar-Class போன்ற ஆளுள்ள மிகப்பெரிய ‘தாய்’ நீர்மூழ்கிகளில் இருந்து கட்டுப்படுத்துவர். தாய் நீர்மூழ்கி பாதுகாப்பான இடத்தில் நிலைகொண்டிருக்கும். அவ்வகையில் இந்த சேய் நீர்மூழ்கிகளை பயன்படுத்தி எதிரிகளின் விமானம் தாங்கி கப்பல் போன்ற பாரிய கப்பல்களை தொலைவில் இருந்து தாக்கி அழிக்கக்கூடியதாக இருக்கும்.
.