கடுங்குளிரால் கனடாவில் புதுவருட நிகழ்வுகள் இரத்து

Ice

கனடாவின் பல நகரங்கள், அங்கு நிலவும் கடும் குளிர் காரணமாக, புதுவருட நிகழ்வுகள் பலவற்றை இரத்து செய்துள்ளன. இந்த நகரங்கள் வாணவேடிக்கை போன்ற சில நிகழ்வுகளை மட்டும் நடாத்தும்.
.
வழமையாக புதிய வருடம் பிறக்கும் வரைக்கும் பல மணித்தியால நிகழ்வுகளை இந்த நகரங்ககள் செய்வதுண்டு. பொதுவாக பாடல் நிகழ்ச்சிகளே இடம்பெறும். அவ்வகை நிகழ்வுகள் பொதுவாக இரத்து செய்யப்பட்டு உள்ளன.
.
Calgary, Winnipeg, Toronto, Ottawa, Montreal, Quebec City, Charlottetown ஆகிய பிரதான நகரங்கள் இவ்வாறு புதுவருட நிகழ்வுகள் பலவற்றை நிறுத்தி உள்ளன.
.
Edmonton நகரில் புதுவருடம் ஆரம்பிக்கும் போது காற்றின் தாக்கத்துக்கு உட்பட்ட வெப்பநிலை சுமார் -40 C ஆக இருக்கும். Calgary நகரமும் சுமார் -40 C வெப்பநிலையை உணரும்.
.
தலைநகர் Ottawa வெப்பநிலை மட்டும் சுமார் -35 C ஆக இருக்கும். காற்றின் தாக்கத்துடனான வெப்பநிலை (windchill) அதிலும் குறைவாக இருக்கும்.
.
Toronto நகரம் சுமார் -30 C  வெப்பநிலையை உணரும். வருடாந்தம் Toronto நகரில் இடம்பெறும் Toronto Polar Bear Dip நிகழ்வும் இந்த வருடம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது மக்கள் கடும் குளிர் நீர் கொண்ட Ontario வாவியில் மூழ்கி வருவார்கள்.
.