ஒருகணம் தான் கூறியதையே மறுகணம் தான் அப்படி கூறவில்லை என்று மறுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் சீடர்களுள் சிலரும் தம் பொய்யை மறுத்து பொய்க்கும் வீரர் என்பதை நிரூபிக்கின்றனர். நெதர்லாந்துக்கான ரம்பின் அமெரிக்க தூதுவர் Pete Hoekstra அண்மையில் இந்த சாதனையை செய்துள்ளார்.
.
நெதர்லாந்து நிருபராக Wouter Zwart அந்நாட்டுக்கான அமெரிக்க தூதுவரை (Pete Hoekstra) ஒரு நேர்முகம் செய்துள்ளார். நேர்முகத்தின் ஆரம்பத்தில் தூதுவரிடம் நீங்கள் நெதர்லாந்தில் இஸ்லாமியர் நெதர்லாந்து அரசியவாதிகளை உயிருடன் ஏரிப்பதாகவும், அப்பகுதிகள் நெதர்லாந்து படையினர் போக முடியாத பகுதிகளாக (no-go zones) உள்ளதாகவும் கூறியிருந்தீர்களே என்றுள்ளார்.
.
தூதுவர் உடனடியாக தான் அப்படி no-go zones இருந்ததாக என்றைக்குமே கூறவில்லை என்றார். அத்துடன் அவ்வாறு தான் கூறியதாக வெளிவந்திருந்த செய்தி ஒரு பொய் செய்தி என்றார். அவ்வகை செய்திகளை தாம் (Trump தரப்பு) fake news என்று அழைப்பதாகவும் கூறினார்.
.
உடனே அந்த நிருபர் தூதுவர் தெர்லாந்தில் no-go zones இருப்பதாக மேற்படி தூதுவர் கூறிய videoவை காண்பித்தார்.
.
மறுகணம் தூதுவர் தான் நெதர்லாந்தில் no-go zones இருந்ததாக கூறியதை என்றைக்குமே மறுத்திருக்கவில்லை என்கிறார். உண்மையில் அந்த நேர்முகத்தின் ஆரம்பத்தில் மறுத்ததையே அவர் மறுத்துவிட்டார்.
.
இப்போது தூதுவராக உள்ள இந்த முன்னாள் அரசில்வாதி ஒருகாலத்தில் அமெரிக்காவின் Chirman of the House Intelligence Committe ஆகவும் பதவி வகித்திருந்தவர்.
.
அவ்விடயம் Youtube:
https://www.youtube.com/watch?v=-Kkib-3ruvI
.