ரம்ப் பிச்சை எடுக்கும் நாடுகளுக்கு எச்சரிக்கை

UN_Israel_Palestinian

ரம்ப் அரசு இஸ்ரவேலுக்கான அமெரிக்காவின் தூதுவரலாயத்தை ஜெருசலேமுக்கு நகர்த்த எடுத்த தீர்மானத்தை ஐ.நா. கண்டித்து நடவடிக்கைகள் எடுத்திருந்தது. கடந்த திங்கள்கிழமை ஐ.நா.வின் 5 veto வாக்குரிமை கொண்ட நாடுகளையும், 10 சாதாரண நாடுகளையும் கொண்ட பாதுகாப்பு அமர்வு (Security Council) ரம்ப் அரசின் தீர்மானத்தை எதிர்த்து முன்வைத்த தீர்மானத்தை பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி உட்பட 14 நாடுகள் ஆதரித்து இருக்க, அமெரிக்கா மட்டும் veto வாக்கை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்து இருந்தது.
.
ஐ.நா.வின் பாதுகாப்பு அமர்வில் முறியடிக்கப்பட்ட இந்த தீர்மானத்தை ஐ.நா.வின்  பொது அமர்வின் (General Assembly) வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. பொது அமர்வில் veto வாக்கை பயன்படுத்த முடியாது.
.
பொது அமர்வில் வாக்கெடுப்பு நிகழும்போது அமெரிக்காவின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளின் பெயர்களை தாம் குறித்து கொள்ளவுள்ளதாக அமெரிக்கா மிரட்டி உள்ளது.
.
“இந்த நாடுகள் எல்லாம் எங்களிடம் பணம் பெற்று பின் எங்களுக்கு எதிராக ஐ.நா.வில் வாக்களிக்கின்றன.” என்றும், ” நாங்கள் இந்த வாக்களிப்புகளை கவனிப்போம்” என்றும் ரம்ப் கூறியுள்ளார்.
.
இன்று வியாழன் இடம்பெறவுள்ள பொது அமர்வின் தீர்மானம் ஐ.நா.வின் சட்டப்படியானது (binding) அல்ல. இது ஒரு அறிக்கையாக மட்டுமே இருக்கும். பாதுகாப்பு அமர்வின் தீர்மானங்கள் மட்டுமே சட்டப்படியானது.
.