சர்வதேச நீதிமன்றில் குற்றவாளி நஞ்சருந்தி மரணம்

SlobodanPraljak

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் யுகோசிலவியாவுக்கான நீதிமன்றம் (ICTY அல்லது International Criminal Tribunal for the former Yugoslavia), அங்கு இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பாக, பல முன்னாள் இராணுவ மற்றும் அரசியல் தலைமைகளை விசாரணை செய்து தண்டித்து வருகிறது.
.
அந்த விசாரணைகளில் ஒரு அங்கமாக குரோசியன் (Croatia) ஜெனரல் Slobodan Praljak என்பவரும் விசாரணை செய்யப்பட்டிருந்தார். இவர் 2004  ஆம் ஆண்டில் தானாகவே விசாரணைக்கு சமூகம் செய்திருந்தார். இவர் ஒரு war crime குற்றவாளி என்று காணப்பட்டு, 2013 ஆம் ஆண்டில் 20 வருட சிறை தண்டனையை பெற்றிருந்தார். தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை அவர் appeal செய்திருந்தார்.
.
இவருக்கு Appeal வழங்க மறுத்தபோது, 72 வயதான இவர் நீதிமன்றிலேயே நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார். அவர் “Slobodan Praljak இந்தே தீர்ப்புக்கு பணியாது எதிர்க்கின்றார்” என்று நீதிபதி முன்னால் கூறிவிட்டு தன்னிடம் இருந்த நச்சு திரவம் ஒன்றை அருந்தியுள்ளார். வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட அவர் அங்கு காலமானார்.
.

இவருக்கு யார் நச்சு திரவம் வழங்கினார் என்று அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.
.