எகிப்தின் சைனாய் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு, மற்றும் துப்பாக்கி தாக்குதல்களுக்கு குறைந்தது 235 பேர் பலியாகியும், மேலும் 100 வரை காயப்பட்டும் உள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை மசூதியில் வழிபாடுகள் இடம்பெற்ற வேளையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
.
.
எகிப்தின் சைனாய் பகுதியில் உள்ள El Arish என்ற நகருக்கு அண்மையில் உள்ள Bir al-Abed என்ற சிறுநகரில் உள்ள Al Rawdah என்ற மசூதி மீதே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. முதலில் குண்டு தாக்குதல் செய்து, பின் துப்பாக்கிகளாலும் தாக்கி உள்ளனர்.
.
கடந்த ஜூலை மாதம் இப்பகுதியில் இராணுவம் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு 23 இராணுவத்தினர் பலியாகி இருந்தனர். மே மாதம் Coptic கிறிஸ்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு 29 பேர் பலியாகி இருந்தனர்.
.
.
2013 ஆம் ஆண்டு முன்னாள் இராணுவ அதிகாரி சிசி (Sisi) தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்திருந்த மோர்சியை (Morsi) இராணுவ கவிழ்ப்பின் மூலம் கைதுசெய்து, ஆட்சியையும் கைப்பற்றி இருந்தார். அதனை தொடர்ந்து எகிப்தில் பெருமளவு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
.