தன் மனைவியை ஜனாதிபதியாக்கும் நோக்கில், தனது உப-ஜனாதிபதியை (Emmerson Mnangagwa) பதவியில் இருந்து விரட்டிய சிம்பாப்வே ஜனாதிபதி Robert Mugabe இறுதியில் தனது பதவியை துறந்துள்ளார். அந்நிலையில் நாட்டை விட்டோடிய முன்னாள் உப-ஜனாதிபதி Emmerson Mnangagwa மீண்டும் சிம்பாப்வே திரும்பியுள்ளார். அவர் அந்நாட்டின் ஜனாதிபதியாக வெள்ளி பதவி பிரமாணம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
.
.
ஆரம்பத்தில் சிம்பாப்வே மக்களின் நலத்துக்கென போராட புறப்பட்ட முகாபே பதவிக்கு வந்தபின் தம் நலத்துக்காகவே செயல்பட்டிருந்தார். நாடு பஞ்சத்தில் மூழ்கியது. ஆனால் முகாபேயின் பிறந்த தினங்களும் பெரும் செலவில் கொண்டாடப்பட்டன. இறுதியில் 93 வயதான முகாபே 52 வயதான தனது கடைசி மனைவியை ஜனாதிபதி ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்கு முதல் படியாக, உப-ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பினார். அப்போதே உருவானது எதிர்ப்பு.
.
.
முகாபே காலத்து அநியாயங்களுக்கு உடந்தையாக இருந்த Mnangawa தன்காலத்தில் நல்லாட்சி புரிவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். முகாபே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரம் கொலைகளுக்கு 75 வயதான Mnangagwaவின் உடன்பாடுகளும் உண்டு. அக்காலத்தில் Mnangagwa நீதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைசராகவும் பதவிகள் வகித்தவர்.
.
.