சிலகாலத்தின் முன் ரொடீசியா என்று அழைக்கப்பட்ட ஆபிரிக்கா நாடான சிம்பாப்வேயில் இராணுவ ஆட்சி ஒன்று தோன்றும் சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன. தற்போது 93 வயதை அடையும் அந்நாட்டு ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேயின் (Robert Mugabe) மரணத்தின் பின்னர் ஆட்சியை கைக்கொள்ளும் நோக்கம் கொண்டவர்களே இந்த முரண்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
.
அங்கிருந்து வரும் செய்திகளின்படி இன்று புதன்கிழமை குறைந்தது 3 குண்டு வெடிப்புகள் தலைநகரில் இடம்பெறுள்ளன. இராணுவமும் அதிகளவில் நடமாடுகின்றன. முகாபேயின் கட்டுப்பாட்டில் இருந்த ஒளிபரப்பு நிலையத்தையும் இராணுவம் சுற்றிவளைத்துள்ளது. முகாபேயின் வதிவிடத்திலும் துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாக சிலர் கூறியுள்ளார்.
.
முகாபேயின் பின்னர், 52 வயதான அவரது இரண்டாவது மனைவி கிரேஸ் (Grace Mugabe) பதவியை கைக்கொள்ள நடவடிக்கைகளை செய்ய ஆரம்பித்துள்ளார். ஆனால் இராணுவத்தின் ஒரு பகுதி அதை விரும்பவில்லை.
.
கடந்த கிழமை முகாபே தனது உப-ஜானதிபதி Emmerson Mnangawa என்பவரை பதவியில் இருந்து விலக்கி இருந்தார். ஆபத்தை உணர்ந்த Mnangagwa சில படையினருடன் அயல் நாடு ஒன்றுக்கு ஓடியுள்ளார்.
.
அந்நாட்டு படைகளின் அதிகாரி ஜெனரல் Constantino Chiwenga முகாபே குடும்பத்தை வன்மையாக சாடியுள்ளார்.
.