அமெரிக்க ஜனாதிபதியின் மகளும், ஜனாதிபதியின் ஆலோசகருமான இவாங்க ரம்ப் (Ivanka Trump) இந்தியாவின் Hyderabad நகருக்கு செல்லவுள்ளார். அவர் அங்கு இந்த மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள Global Entrepreneurship Summit (GES) என்ற நிகழ்வில் பங்க கொள்ளவார். அவரின் வருகைக்காக அந்நகரை அழகுபடுத்தும் நோக்கில் அந்நகரில் உள்ள பிச்சைக்காரர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
.
நேற்று வெள்ளிக்கிழமை வரை சுமார் 400 பிச்சைக்காரர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், மிகுதி பிச்சைக்காரர்களை அடைக்கும் பணி தொடர்வதாகவும் கூறப்படுகிறது. அந்த நகரில் சுமார் 6,000 பிச்சைக்காரர் உள்ளதாக கணிப்பிடப்பட்டு உள்ளது.
.
இந்தியாவின் இரண்டாம் Silicon Valley என்று அழைக்கப்படும் இந்த நகரத்திலேயே அமெரிக்காவின் Apple, Google, Microsoft ஆகிய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது கிளைகளை கொண்டுள்ளன.
.
2000 ஆம் ஆண்டில் Bill Clinton இந்நகர் சென்றபோதும் இவ்வாறு பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
.
GES நிகழ்வின்போது இந்திய இசை அமைப்பாளர் A. R. Rahman இசை நிகழ்ச்சி ஒன்றையும் நடாத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
.