அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டு குந்தகம் விளைவித்ததா என்றும் அதற்கு அமெரிக்கர் எவராவது உடந்தையாக இருந்தனரா என்பதையும் அறியும் பொருட்டு Robert Mueller தலைமையில் உருவாக்கப்பட்ட விசாரணை குழு அண்மையில் நேற்று ரம்பின் முன்னாள் பங்காளிகளை கைது செய்திருந்தது. Paul Manafort, Rick Gates,
George Papadopoulos ஆகியோரே அந்த மூவர்.
.
.
இந்த கைதுகளால் குமுறுகிறார் ரம்ப். மிக முக்கியமாக Papadopoulos மீதே ரம்ப் தனது மிகையான ஆவேசத்தை காட்டியுள்ளார். Papadopoulos ஒரு liar, ஓர் low level volunteer என்றெல்லாம் விபரித்து உள்ளார் ரம்ப். 2016 ஆம் ஆண்டில் இதே Papadopoulosசை “excellent guy” என்று கூறியிருநதார். அத்துடன் அவர் ரம்பின் 5 வெளியுறவு கொள்கை ஆலோசகருள் ஒருவராகவும் நியமிக்கப்பட்டு இருந்தார்.
.
.
ரம்பின் Twitter “Few people knew the young, low level volunteer named George, who has already proven to be a liar” என்கிறது.
.
Papadopoulos தன் மீதான தண்டனைகளை குறைக்கும் நோக்கில் தற்போது அரச தரப்பு சாட்சியாக மாறி இருக்கலாம் என்று கருதியே ரம்ப் குமுறக்கூடும்.
.
.
Paul Manafort மீதும், அவரது உதவியாளர் Rick Gates மீதும் 12 குற்றங்கள் சுமத்தப்பட்டு உள்ளன. அவற்றுள் வரி செலுத்த தவறியமை, பண கடத்தல் செய்தமை (laundering), களவான வெளிநாட்டு வங்கி கணக்குகள் கொண்டிருந்தமை போன்ற குற்றசாட்டுகளை அடங்கும்.
.