Kirkuk பகுதிக்குள் நுழைந்தது ஈராக்

Iraq

இன்று திங்கள் ஈராக் இராணுவம் மீண்டும் கேர்குக் (Kirkuk) பகுதிக்குள் நுழைந்துள்ளது. அங்கு நுழைந்த ஈராக் படையினர் முக்கிய அரச கட்டிடங்களை கைக்கொண்டு, ஈராக் தேசிய கொடியையும் ஏற்றி உள்ளனர். எண்ணெய்வளம் நிறைந்த இந்த பகுதி இன்றுவரை Kurdish பிரிவினைவாதிகளின் கையில் இருந்தது.
.
நீண்ட காலமாக Kirkuk ஈராக்கின் ஒரு பாகமாகவே இருந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் IS தீவிரவாதிகள் இந்த இடத்தை தமது கட்டுப்பாட்டுள் எடுத்திருந்தனர். அந்த IS தீவிரவாதிகளை பல நாடுகள் கூட்டாக விரட்டினர். அந்த முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், ஈரான், துருக்கி என்று பலரும் இனைந்து செயல்பட்டனர். அந்த நடவடிக்கையின் அங்கமாக அமெரிக்கா உட்பட பல மேற்கு நாடுகள் Kurdish ஆயுத குழுக்களுக்கும் பயிற்சி, ஆயுதம் வழங்கி வளர்த்தன.
.
IS அமைப்பை அண்மையில் விரட்டிய பின் ஏற்பட்ட ஆட்சி வெற்றிடத்தை நிரப்ப நுழைந்தது Kurdish ஆயுத குழுக்கள். அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியிருந்தது ஈராக் அரசு. Kurdish குழுக்கள் வெளியேற மறுத்தன. பதிலாக Kurdish குழுக்கள் தனிநாடு அமைக்கும் நோக்கில் அப்பகுதியில் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை நிகழ்த்தின.
.
Kurdish குழுக்களுக்கு வழங்கிய காலக்கெடு முடிவடைந்த நிலையில் இன்று ஈராக் படைகள் அப்பகுதியுள் நுழைந்தன. Kurdish குழுக்கள் எதிர்ப்பு எதுவும் தொடுக்காது பின்வாங்கின.
.
ஆனாலும் தாம் மக்கள் பெருமளவில் வசிக்கும் இடங்களில் ஈராக் படைகள் நுழைவதை தடுக்க உள்ளதாக கூறியுள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் வாழ்ந்த Kurdish மக்கள் பயத்தின் காரணமாக அப்பகுதியை விட்டு வெளியேற தொடங்கி உள்ளனர்.
.
ஈராக் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஈரானும், துருக்கியும் ஆதரவு வழங்கி உள்ளன. ஈரான், துருக்கி ஆகிய இடங்களிலும் Kurdish குழுக்கள் பிரிவினை கேட்டு போராடி வருகின்றனர்.
.