சனிக்கிழமை சோமாலியாவில் வெடிக்க வைக்கப்பட்ட இரண்டு truck குண்டுகளுக்கு குறைந்தது 276 பேர் பலியாகியும், 300 பேருக்கும் மேலானோர் காயப்பட்டும் உள்ளார். இரண்டு truck குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டாலும், முதலாவது குண்டுக்கே பலரும் பலியாகி உள்ளனர்.
.
Mogadishu என்ற சோமாலியாவின் தலைநகரில் இடம்பெற்ற இந்த இரட்டை குண்டு தாக்குதல் Safari என்ற விடுதிக்கு அருகாமையிலேயே இடம்பெற்றுள்ளது. சோமாலியாவின் ஜனாதிபதி Mohamed Abdullahi Mohamed இந்த குண்டுகளுக்கு al-Shabab என்ற அல்கைடா ஆதரவு குழுவே காரணம் என்றுள்ளார். இவர் ஒரு சோமாலியா-அமெரிக்கா பிரசையும் ஆவார்.
.
செஞ்சிலுவை சங்கமும், Red Crescent சங்கமும் பலியானோரில் 5 பேர் தமது ஊழியர்கள் என்றுள்ளன.
.
2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவும், சுமார் 22,000 African Union படையினரும் al-Shabab என்ற குழுவை அழிக்க பல முனைகளில் தாக்குதல்கள் செய்து வருகின்றனர்.
.