அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சீனா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் 2015 ஆம் ஆண்டில் செய்துகொண்ட Joint Comprehensive Plan of Action (JCPOA) என்ற உடன்படிக்கையில் இருந்து ரம்ப் வெளியேறுவதை ஐரோப்பிய நாடுகள் கூட்டாக கண்டித்து உள்ளன.
.
ஜேர்மனியின் அதிபர் Angela Merkel, பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron, பிரித்தானிய பிரதமர் Theresa மே ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்கா JCPOA உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதால் உருவாகப்போகும் பாதிப்புகளை கவனிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
.
ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் ரம்பின் நடவடிக்கை “difficult and dangerous signal” என்றுள்ளார்.
.
European Council அமைப்பின் வெளிவிவகார ஆய்வாளர் ரம்பின் இந்த நடவடிக்கை ஐரோப்பிய நட்பு நாடுகள் மீதான அமெரிக்காவின் துரோகம் (betrayal) என்றுள்ளார்.
.