LasVegas சூட்டுக்கு 50 பேருக்குமேல் பலி

MandalayBay

அமெரிக்காவின் Nevada மாநிலத்தில் உள்ள Las Vegas என்ற களியாட்ட நகரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுக்கு 50 பேருக்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டும், 400 பேருக்கு மேலானோர் காயமடைந்தும் உள்ளனர். இந்த சம்பவம் Mandalay Bay Resort and Casino என்ற நிலையத்துக்கு முன்னாலேயே இடம்பெற்று உள்ளது.
.
ஞாயிறு இரவு 10:08 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு ஆரம்பமாகியது என்று கூறப்படுகிறது. Stephen Paddock என்ற 64 வயதுடையவரே இந்த துப்பாக்கி சூட்டை செய்துள்ளார். போலீசார் இவர் தங்கி இருந்த 32வது மாடியை அடைய முன்னரேயே இவர் தற்கொலை செய்து உள்ளார். இவருடன் தங்கியிருந்த ஆசிய நாட்டு பெண்ணான Marilou Danly தற்போது போலீசாரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
.
இந்த படுகொலையே அமெரிக்காவின் வரலாற்றில் இடம்பெற்ற அதிபெரிய துப்பாக்கி சூட்டு படுகொலையாகும். அங்கு இடம்பெற்ற Route 91 Harvest Festival என்ற திறந்த வெளி பாடல் நிகழ்வு ஒன்றின்போது இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. அப்போது பாடகர் Jason Aldeanனின் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டு இருந்தது. சுமார் 22,000 மக்கள் அங்கு சூழ்ந்திருந்தனர்.
.
Mandalay Bay அந்நகரின் தெற்கே, விமான நிலையத்துக்கு அருகில் உள்ளது.
.