ஸ்பெயினில் இருந்து பிரிய முற்படும் Catalonia

Barcelona

ஸ்பெயின் நாட்டின் (Spain) ஒரு பகுதியாக உள்ள கற்ரலுன (Catalonia) என்ற பகுதி. அப்பகுதி அண்மைக்காலமாக ஸ்பெயினில் இருந்து விலகி, தனி நாடாக செயல்பட முனைகிறது. இதை வன்மையாக எதிர்க்கிறது ஸ்பெயின். இன்று அங்கு நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்று பெரும் வன்முறைகளில் முடிந்துள்ளது.
.
இன்று இடம்பெற்ற அங்கீகரிக்கப்படாத வாக்கெடுப்பை தடுத்து நிறுத்துமாறு ஸ்பெயின் அரசு பொலிஸாருக்கு கட்டளை விடுத்திருந்தது. அவ்வாறு போலீசார் வாக்கு சாவடிகளை மூட முனைந்தபோதும், வாக்கு பெட்டிகளை கைப்பற்ற முனைந்தபோதும் வன்முறைகள் தோன்றியுள்ளன. Catalonia பிரதேச அரசு சுமார் 844 பொதுமக்களும், 3 போலீசாரும் காயமடைந்து உள்ளதாக கூறியுள்ளது.
.
வன்முறைகளுக்கு மத்தியிலும் சுமார் 2.26 மில்லியன் மக்கள் வாக்களித்து உள்ளதாக கூறுகிறது அப்பிரதேச அரசு. இத்தொகை அப்பகுதியின் 42% வாக்காளர் தொகையாகும்.
.
வாக்களிப்பு இடப்பெறவிருந்த 400 பாடசாலைகளை போலீசார் மூடி வைத்திருந்தனராம்.
.
15ஆம் நூற்றாண்டு முதல் Catalonia பகுதி ஸ்பெயினின் அங்கமாகவே உள்ளது. இப்பகுதி மொழியான Catalan ஸ்பானிஸ் மொழியில் இருந்து வேறுபட்டது. இப்பகுதி ஸ்பெயினில் ஒரு சுயாதீன (autonomous) பகுதியாகவே தற்போது உள்ளது.
.

இப்பகுதியில் உள்ள மிக பெரிய நகரம் Barcelona ஆகும். Barcelona ஸ்பெயின் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும்.
.