இலங்கையில் குழந்தை பண்ணைகள் இயங்கி வருவதாக கூறுகிறது நெதர்லாந்து தொலைக்காட்சி விவரண படக்காட்சி ஒன்று. Zembla என்ற இந்த நெதர்லாந்து தொலைக்காட்சி நிறுவனம் Adoptibedrog – Deel 2 என்ற தலைப்பில் இன்று செப்டம்பர் 20ம் திகதி மாலை 9:15 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்வே இலங்கையின் குழந்தை பண்ணைகளை அடையாளம் காண்கிறது.
.
.
இந்த குழந்தை பண்ணைகளில் இருந்து குழந்தைகள் வெளிநாட்டு கொள்வனவாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாம். 1980ம் ஆண்டுகளிலேயே இங்கிருந்து அதிகம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், 1987 ஆம் ஆண்டு இலங்கை போலீசார் மேற்கொண்ட கைதுகளின் பின்னர் விற்கப்படும் தொகை குறைந்ததாகவும் இந்த நிகழ்ச்சி கூறுகிறது. அப்போது 20 குழந்தைகளை பைப்பற்றிய போலீசார், 22 பெண்களையும் கைது செய்திருந்தனர்.
.
.
1980களில் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11,000கும் மேல் என்றும், அதில் சுமார் 4,000 குழந்தைகள் நெதர்லாந்துக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறுகிறது இந்த நிகழ்ச்சி.
.
.
இந்த நிகழ்ச்சியில் தோன்றும் மத்துகம (Matugama) பெண் ஒருவர் தனது குழந்தை பிறப்பின்போது மரணித்துவிட்டதாக கூறப்பட்டதாகவும், ஆனால் சிலர் அந்த குழந்தையை வைத்தியர் எடுத்து செல்வதை பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
.
.
இந்த நிகழ்ச்சியில் தோன்றும் இன்னோர் இலங்கை பெண் தன்னை ஒரு குழந்தையின் தாய் போல் நடித்து ஒரு குழந்தையை விற்பனை செய்ய கூறி 2,000 ரூபாய் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்.
.
https://www.youtube.com/watch?v=8tMEKMJvbjY
.