துருக்கி (Turkey) ஒரு NATO நாடு. ஆனால் தாம் ரஷ்யாவின் S-400 வகை நிலத்தில் இருந்து வானத்துக்கான ஏவுகணைகளை (surface-to-air) கொள்வனவு செய்யவுள்ளதாக இன்று செவ்வாய் அறிவித்து உள்ளது துருக்கி. இந்த கொள்வனவு துருக்கிக்கும் ஏனைய NATO நாடுகளுக்கும் இடையில் வளரும் முரண்பாட்டை தெளிவாக காட்டியுள்ளது.
.
.
Cold War காலத்தில் சோவியத் யூனியனுக்கு எதிராகவும், பின்னர் ரஷ்யாவுக்கு எதிராகவும் செயல்படும் நோக்கத்தை முதன்மையாக கொண்டு உருவாக்கப்பட்ட அணியே NATO. அந்த அணியில் அங்கமான துருக்கி இன்று ரஷ்யாவின் தாயாரிப்பான S-400 ஏவுகணைகளை கொள்வனவு செய்வது NATO அணியின் முதன்மை நோக்கத்துக்கு எதிரானது.
.
.
அண்மையில் ஜனாதிபதி Erdogan தலைமையிலான துருக்கி அரசை இராணுவ சதி மூலம் கவிழ்த்து, பதிலாக ஒரு இராணுவ ஆட்சியை அமைக்க புரட்சி ஒன்று இடம்பெற்றது. ஆனால் அந்த முயற்ச்சி முறியடிக்கப்பட்டது. ஜனாதிபதி Erdogan தனது ஆட்சியை அமெரிக்காவில் உள்ள Gulen என்ற துருக்கியர் உதவி மூலம் மேற்கு நாடுகள் கவிழ்க்க முனைந்ததாக கூறி இருந்தார். அத்துடன் புரட்சியின் பின்னர் மேற்கு நாடுகளுக்கு தப்பி ஓடிய பல இராணுவ அதிகாரிகளை துருக்கிக்கு திருப்பி அனுப்ப அந்த நாடுகளை Erdogan கேட்டிருந்தார். ஆனால் மேற்கு நாடுகள் தப்பி ஓடிய இராணுவத்தினரை துருக்கிக்கு அனுப்பவில்லை.
.
.
துருக்கி முதலில் சீனாவிடம் இருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்ய விரும்பி இருந்திருந்தாலும், NATO நாடுகளின் விருப்பத்துக்கு இணங்க சீனா அவ்வாறு ஏவுகணைகளை துருக்கிக்கு விற்பனை செய்ய மறுத்துவிட்டது.
.