Houston வீடுகள் பல கிழமைகளுக்கு வெள்ளத்துள்

HoustonFlood

அமெரிக்காவின் Texas மாநிலத்து ஹியூஸ்ரன் (Houston) நகரில் கடந்த கிழமை Harvey என்ற சூறாவளி பொழிந்த மழை நீருள் பல்லாயிரம் வீடுகள் மூழ்கி உள்ளன. இந்த வீடுகள் தொடர்ந்தும் பல கிழமைகளுக்கு நீருள் மூழ்கி இருக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன் அந்த பகுதி வீதிகளில் தொடர்ந்தும் வள்ள போக்குவரத்தே சாத்தியமாக இருக்கும்.
.
ஹியூஸ்ரன் மாநகர முதல்வர் Sylvester Turner கூறிய கருத்துப்படி அங்குள்ள இரண்டு நீர் அணைகள் தொடர்ந்து மேவி பாய்வதால் அவ்விடத்தில் சுமார் 20,000 வீடுகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கும்.
.
HoustonFlood2
.
இந்த சூறாவளிக்கு இதுவரை குறைந்தது 42 பேர் பலியாகியும், மேலும் 42,000 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். அத்துடன் குறைந்தது 150,000 வீடுகள் பாதிக்கப்பட்டும் உள்ளன.
.
அமெரிக்க ஜனாதிபதி இந்த சூறாவளி நிவாரணத்துக்காக $7.85 பில்லியன் உதவியை அந்நாடு காங்கிரஸிடம் வேண்டியுள்ளார்.
.

இந்த சூறாவளி ஹியூஸ்ரன் மாநகரின் தென்கிழக்கு பகுதியில் 50 அங்குலம் மழையை பொழிந்துள்ளது. இது சில இடங்களில் 212 km/h காற்று வீச்சத்தையும் கொண்டிருத்துள்ளது.
.