இன்று பூமிக்கு அருகால் சென்றது Florence என்ற 4.4 km விட்டம் கொண்ட விண்கல் (asteroid). இந்த கல் பூமியில் இருந்து சுமார் 7 மில்லியன் km தூரத்தில் சென்றுள்ளது. இது பூமிக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் 18 மடங்காகும்.
.
.
வழமையாக விண்கற்கள் அவ்வப்போது பூமிக்கு அருகால் சென்றாலும் பொதுவாக அவை இவ்வளவு பெரிய கல்லாக இருப்பதில்லை. அவை ஒரு பஸ் அளவு அல்லது ஒரு வீடு அளவு கல்லாகவே இருக்கும். NASA ஆவணப்படுத்திய கற்களுள் Florence என்ற இந்த கல்லே மிக பெரிய விண்கல்லாகும். இந்த கல் 1981 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டு இருந்தது.
.
.
கணிப்பீடுகளின்படி இந்த கல் 1890 ஆம் ஆண்டிலும் இவ்வாறு பூமிக்கு அண்மையில் சென்று இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. மீண்டும் இந்த கல் 2500 ஆம் ஆண்டில் பூமிக்கு அண்மையில் பயணிக்கும். இந்த கல் பூமியை ஒருதடவை சுற்ற 2.35 வருடங்கள் தேவைப்படும்.
.
.
சந்திரன் தன்னில் படும் சூரிய ஒளியின் 12% ஒளியை மட்டுமே தெறிக்க வைக்கும். அதையே நாம் நிலவாக காண்கின்றோம். ஆனால் இந்த கல் 20% ஒளியை தெறிக்க வைக்கும். அதனால் இந்த கல்லை இலகுவாக தொலைநோக்கிகள் மூலம் பார்க்கலாம்.
.
.
இந்த அளவிலான கல் ஒன்று பூமியில் மோதினால், அது உலக அளவிலான பாதிப்பை கொடுக்கும்.
.