Google தண்டிக்கும் தனது Think Tank

Google

உலகத்திலேயே மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனமான Google, அது நன்கொடை வழங்கி வளர்க்கும் பொது நலனை நோக்காக கொண்ட think tank ஒன்றை தண்டித்து உள்ளது. பொதுநலனில் அக்கறை கொண்டவர்கள் என்று தம்மை காட்டிக்கொள்ளும் Google நிறுவன உயர்மட்டங்கள் இவ்வாறு நடந்து கொண்டமை அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.
.
New America Foundation என்ற think tank ஏறக்குறைய முழுமையாக Google வழங்கும் நன்கொடையில் இயங்கும் பொதுநல அமைப்பு. Google நிறுவனத்தின் தாய் நிறுவன executive chairman Eric Schmidt என்பவரும் New America Foundationனுக்கு நன்கொடை செய்துள்ளார். அத்துடன் அவர் 2016 ஆம் ஆண்டு வரை New America Foundationனின் chairman ஆகவும் இருந்துள்ளார்.
.
கடந்த ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் antitrust விடயம் காரணமாக Google மீது $2.7 பில்லியன் தண்டம் விதித்து இருந்தது. அந்த தண்டத்தை வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது 10 பேர் கொண்ட New America Foundation அமைப்பின் உபகுழு ஒன்று. அதனால் கோபம் கொண்ட Eric Schmidt அழுத்தங்கள் கொடுத்து அந்த உபகுழுவை பதவியில் இருந்து விரட்டி உள்ளார். ஆனால் அப்படி Eric அழுத்தம் செய்யவில்லை என்கிறது New America Foundation.
.
விரட்டப்பட்டவர்களில் ஒருவரான Barry Lynn என்பவர் “Google is very aggressive in throwing its money around Washington and Brussels and then pulling the strings” என்றும் “People are so afraid of Google now” என்றும் கூறியுள்ளார்.

.