பிரான்ஸ் ஜனாதிபதியின் அலங்காரத்துக்கு மாதம் $10,000

Macron

அண்மையில் பெரும் ஆதரவுடன் ஜனாதிபதியான தெரிவு செய்யப்பட்ட 39 வயதான பிரான்ஸின் ஜனாதிபதி Emmanuel Macron தனது முதல் மூன்று மாதகால அலங்காரத்துக்கு $31,000 (26,000 euro) வரையான தொகையை செலவு செய்துள்ளதாக Le Point வெளியீடு கூறியுள்ளது.
.
ஜனாதிபதியின் அலங்காரத்துக்காக அலங்காரம் செய்பவரான Natacha என்பவருக்கு 26,000 யூரோக்கள் (euro) வழங்கப்பட்டுள்ளது என்கிறது இந்த செய்தி.
.
ஜனாதிபதி குடியிருக்கும் Elysee Palace இந்த தரவுகளை உறுதியம் செய்துள்ளது.
.
இவருக்கு முன் பதவியில் இருந்த பிரான்ஸின் ஜனாதிபதிகளும் இவ்வாறு பெரும் தொகை பணத்தை அலங்காரத்துக்கு செலவழித்ததாக கூறப்படுகிறது. Hollande மாதம் ஒன்றில் 6,000 யூரோக்களை அலங்காரத்துக்கு, 10,000 யூரோக்களை சிகை அலங்காரத்துக்கு செலவு செய்ததாக கூறப்படுகிறது. Sarkozy மாதம் ஒன்றில் 8,000 யூரோக்களை அலங்காரத்துக்கு செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
.
ஆனால் ஒரு பெண்ணான ஜெர்மனியின் அதிபர் Angela Merkel மாதம் ஒன்றில் சுமார் 260 யூரோக்களை மட்டுமே அலங்காரத்தில் செலவு செய்வதாகவும் கூறப்படுகிறது.

.