மீண்டுமொரு அமெரிக்க யுத்த கப்பல் விபத்தில்

USSJohnMcCain

மீண்டும் ஒரு நவீன அமெரிக்க யுத்த கப்பல் விபத்தில் சிக்கியுள்ளது. USS John S. McCain என்ற தாக்கியழிக்கும் யுத்த கப்பல் (destroyer) இன்று திங்கள் காலை, சிங்கப்பூருக்கு அண்மையில், Strait of Malaccaவில் வர்த்த கப்பல் ஒன்றுடன் மோதியுள்ளது.
.
சிங்கப்பூர் நேரப்படி திங்கள் காலை 6:24 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தின் பின் அதில் இருந்த 10 கடல்படையினரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் சாதாரணமாக 23 உயர் அதிகாரிகள், 24 இடைநிலை அதிகாரிகள், மற்றும் 291 கடற்படையினர் இருப்பர்.
.
1994 ஆம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த இந்த கப்பல் 154 மீட்டர் நீளமும், 9,000 தொன் நிறையும் கொண்டது. 1997 ஆம் ஆண்டு முதல் இந்த யுத்த கப்பல் ஜப்பானின் Yokosuka என்ற துறைமுகத்தை தளமாக கொண்டுள்ளது. விபத்தின்போது இந்த கப்பல் சிங்கப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.
.
கடந்த ஜூன் மாதம் USS Fitzgerald என்ற அமெரிக்காவின் யுத்த கப்பலும் ஜப்பானுக்கு அருகில் கொள்கலன் காவும் கப்பல் ஒன்றுடன் மோதியிருந்தது, அந்த விபத்தில் 7 கடற்படையினர் பலியாகி இருந்தனர். அந்த கப்பலும் சேவையில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளது. அதன் தலைமை இராணுவ அதிகாரியும், சில உயர் அதிகாரிகளும் இப்போது இராணுவ தண்டனை பெற்றுள்ளார்.

.