சிம்பாப்வே (Zimbabwe) நாட்டின் சர்வாதிகாரி Robert Mugabeயின் மனைவி Grace Mugabe தாக்கியதில் தென்னாபிரிக்க அலங்காரி (model) ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றதால் அவரை அங்கு கைது செய்ய அழுத்தங்கள் உருவாகி இருந்தன. ஆனாலும் Grace Mugabeக்கு இராசதந்திரிகளுக்கான உரிமை (diplomatic immunity) வழங்கியுள்ளது தென்னாபிரிக்கா.
.
.
Gabriella Engels என்ற தென்னாபிரிக்க அலங்காரியும் அவளின் இரண்டு நண்பிகளும் Grace முகாபேயின் இரண்டு மகன்களை சந்திக்க கடந்த ஞாயிற்று கிழமை தென்னாபிரிக்க விடுதி ஒன்றில் நின்றிருந்தனர். இங்கு வந்த 52 வயதுடைய தாய் Grace முகாபேயே அந்த அலங்காரியை தாக்கி உள்ளார்.
.
.
Grace முகாபேயை கைது செய்ய பலரும் கூறியிருந்தாலும் தென்னாபிரிக்க அரசு Grace முகாபேக்கு diplomatic immunity வழங்கி அவரை தன்னாட்டுக்கு திரும்பி செல்ல அனுமதி வழங்கி உள்ளது. அவரும் உடனேயே Zimbabwe சென்றுவிட்டார்.
.
.
Grace முகாபே 2009 ஆம் ஆண்டில் பொருட்கள் கொள்வனவு செய்ய Hong Kong சென்றிருந்தார். அப்போது அவரை The Times பத்திரிகையார் புகைப்படம் எடுக்க முனைந்துள்ளார். அதானால் கோபம் கொண்ட Grace அவரையும் தாக்கி இருந்தார். Hong Kongகில் இவர்களுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும், இவரின் மக்கள் Bona அங்கு கல்வி கற்பதாகவும் கூறப்படுகிறது.
.