இலங்கையின் தெற்கே மகிந்த அரசால் நிமாணிக்கப்பட்டு பெரும் பயன்பாடு இல்லாமல் இருக்கும் மத்தள விமான நிலையத்தை (Mattala Rajapaksa International Airport) இந்தியா கொள்வனவு செய்ய முனைகிறது. இந்திய நிறுவனம் ஒன்று மத்தள விமான நிலையத்தின் 70% உரிமையை வரும் 40 வருடங்களுக்கு கொள்வனவு செய்ய முன்வந்துள்ளது. இந்த உரிமைக்கு இந்திய நிறுவனம் $205 மில்லியன் வழங்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
.
.
இந்த திட்டத்தை இலங்கையின் Civil Aviation அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா அமைச்சரவைக்கு அனுப்பி உள்ளார்.
.
.
இந்த விமான நிலையத்தை இயக்க மொத்தம் 8 குழுக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளன. அதில் சீனாவின் திட்டம் ஒன்றும் அடங்கும்.
.
.
இந்த விமான நிலையம் $209 மில்லியன் கடன் பெற்று நிர்மாணிக்கப்பட்டது. இக்கடனில் பெருமளவு சீனாவிடம் இருந்தே பெறப்பட்டது. சீனாவின் Exim Bank என்ற வங்கியிடம் மட்டும் $190 மில்லியன் கடன் பெறப்பட்டதாம்.
.