மொத்தம் 80 நாட்டவர்கள் கட்டாருக்கு இன்று முதல் விசா இன்றி பயணிக்க முடியும் என்று கட்டார் இன்று புதன் அறிவித்து உள்ளது. சவுதி தலைமையிலான நாடுகள் கட்டார் மீது விதித்துள்ள தடையை முறியடிக்கும் நோக்கமே கட்டாரின் இந்த முயற்சி என்று கருதப்படுகிறது. அத்துடன் 2022 ஆம் ஆண்டில் கட்டாரில் இடம்பெறவுள்ள FIFA World Cup உதைபந்தாட்ட போட்டிக்கு பார்வையாளர் வருகை தருவதையும் விசா இன்மை ஊக்கப்படுத்தும்.
.
.
மேற்குறிப்பிடப்பட்ட 80 நாடுகளில், 33 நாட்டவர் ஒரு தடவையில் விசா இன்றி 90 நாட்கள் கட்டாரில் தங்கி இருக்கலாம். ஏனைய 47 நாடுகளை சார்ந்தவர்கள் விசா இன்றி 30 நாட்கள் கட்டாரில் தங்கி இருக்கலாம்.
.
.
இந்த நாடுகளை சார்ந்தவர்கள் முன் நடவடிக்கைகள் எதுவும் இன்றி கட்டார் சென்று அங்கு on-arrival விசா பெற்று கொள்ளலாம். இந்த விசாக்கள் இலவசமாகவே வழங்கப்படும். இலங்கையர் பழைய விசா முறைமையிலேயே இருப்பர்.
.
.
இலவச 90-நாள் விசா பெறக்கூடிய நாட்டவர்:
- Austria
- Bahamas
- Belgium
- Bulgaria
- Croatia
- Cyprus
- Czech Republic
- Denmark
- Estonia
- Finland
- France
- Germany
- Greece
- Hungary
- Iceland
- Italy
- Latvia
- Liechtenstein
- Lithuania
- Luxembourg
- Malta
- Netherlands
- Norway
- Poland
- Portugal
- Romania
- Seychelles
- Slovakia
- Slovenia
- Spain
- Sweden
- Switzerland
- Turkey
இலவச 30 நாள் விசா பெறக்கூடிய நாட்டவர்:
- Andorra
- Argentina
- Australia
- Belarus
- Bolivia
- Brazil
- Brunei
- Canada
- Chile
- China
- Colombia
- Ecuador
- Panama
- Costa Rica
- Georgia
- Guyana
- Hong Kong
- India
- Indonesia
- Ireland
- Japan
- Kazakhstan
- Lebanon
- Azerbaijan
- Macedonia
- Malaysia
- Maldives
- Mexico
- Moldova
- Monaco
- New Zealand
- Paraguay
- Peru
- Russia
- San Marino
- Singapore
- South Africa
- South Korea
- Suriname
- Cuba
- Thailand
- Ukraine
- United Kingdom
- United States
- Uruguay
- Vatican City
- Venezuela