ஒலிம்பிக்கை விட்டோடும் நாடுகள்

Olympics

சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு அமைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் நகரம் பிரான்சின் Paris நகரம் என்றும், 2028 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் இடம்பெறவுள்ள நகரம் அமெரிக்காவின் Los Angeles என்றும் இன்று அறிவித்து உள்ளது.
.
முன்னர் செல்வந்த நாடுகள் ஒலிம்பிக் போட்டியை தமது நகரங்களில் நடாத்த போட்டி போடுவது வழமை. ஆனால் தற்காலங்களில் பெருமளவு நாடுகள் ஒலிம்பிக் போட்டியை நடாத்த முன்வருவது இல்லை. ஒலிம்பிக் போட்டியை நடத்துவதால் கிடைக்கும் சாதகங்கள் சிறிதாகவும், பாதகங்கள் அதிகமாகவும் அமைவதே இவ்வாறு பல நாடுகள் பின்வாங்க காரணம்.
.
அதீத செலவு முக்கியமான ஒரு பாதகமாக உள்ளது. போட்டிக்கான கட்டுமான செலவுகளின் ஒரு பங்கை ஒலிம்பிக் அமைப்பு ஏற்றுக்கொண்டாலும், அந்த நகரங்கள் பெரும் செலவு செய்யவேண்டி உள்ளது. அத்துடன் போட்டிக்கு பின் இந்த கட்டிடங்கள் பயன்பாடு இல்லாது அழிந்து போகின்றன. அத்துடன் அதிகரித்த வாகன நெரிசல்களும் பெரியதோர் இடராக உள்ளது.
.
Paris நகரமும், Los Angeles நகரமும் மட்டுமே 2024 ஆம் ஆண்டுக்கான போட்டியை நடாத்த இறுதியில் போட்டியிட்டன. இந்த இரண்டு நாடுகளும் போட்டியிட்டு பணத்தை விரயமாக்குவதற்கு பதிலா, ஒரு நகரம் (பாரிஸ்) 2024 ஆம் ஆண்டு போட்டியையும், மற்றைய நகரம் (Los Angeles) 2028 ஆம் ஆண்டு போட்டியை நடாத்த போட்டியின்றி இணங்கி உள்ளன.
.
Los Angels போட்டிகளுக்கான கட்டுமான வேலைகளுக்கு ஒலிம்பிக் அமைப்பு $1.8 பில்லியன் வழங்கும். அனால் மொத்த செலவு சுமார் $5.3 பில்லியன் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
.
Los Angeles இதற்கு முன் இரண்டு தடவைகள் ஒலிம்பிக் போட்டியை நடாத்தி உள்ளது. முதலில் 1932 ஆம் ஆண்டிலும், பின்னர் 1984 ஆம் ஆனாலும் இந்த போட்டிகள் அங்கு இடம்பெற்று இருந்தன.
.

Paris நகரிலும் இதற்கு முன் 1900 ஆம் ஆண்டிலும், 1924 ஆண்டிலுமாக இரண்டு தடவைகள் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்று உள்ளன.
.