இந்தியா 1,500 kg போதையை கைப்பற்றியது

India

கடந்த சனிக்கிழமை இரவு இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படை (coast guards) 1,500 kg எடை கொண்ட போதையை கப்பல் ஒன்றில் இருந்து கைப்பற்றி உள்ளது. இந்த போதையின் சந்தை பெறுமதி சுமார் $550 மில்லியன் ஆக இருக்கும் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவினால் கைப்பற்றப்பட்ட அதி கூடிய போதை இதுவே.
.
இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை தொடர்ந்து இக்கப்பல் இடைமறித்து சோதனை செய்யப்பட்டு உள்ளது. MV Henry என்ற பெயர் கொண்ட இந்த கப்பல் பனாமா நாட்டு கொடியுடன் பயணித்து உள்ளது. இக்கப்பல் Dubai இருந்து Alang என்ற குயாரத் துறைமுகம் நோக்கி பயணிக்கையிலேயே இந்த கைப்பற்றல் இடம்பெற்று உள்ளது.
.
இந்த கப்பலில் மொத்தம் 8 பணியாளர் இருந்துள்ளனர் என்றும் அவர்கள் அனைவரும் இந்திய பிரசைகள் என்றும் கூறப்படுகிறது. இவர்களை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
.
இந்த போதை ஆப்கானிஸ்தானில் உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
.
கடந்த வருடம் இந்தியாவின் மேற்கே உள்ள வேறு ஒரு மாநிலமான மஹாராஸ்ராவின் போலீசார் $311 மில்லியன் பெறுமதி கொண்ட 18.5 தொன் ephedrine என்ற போதையை கைப்பற்றி இருந்தனர்.
.