755 அமெரிக்கரை வெளியேற்றினார் பூட்டின்

USRussia

அமெரிக்காவின் Senate அண்மையில் ரஷ்யா மீது நடைமுறைப்படுத்திய மேலதிக தடைகளுக்கு பதிலடி வழங்கும் நோக்கில் பூட்டின் இன்று ஞாயிறு 755 அமெரிக்க இராசதந்திரிகளை நாட்டைவிட்டு வெளியேற கேட்டுள்ளார். இது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவிவரும் முறுகல் நிலையை மேலும் உக்கிரம் ஆக்கியுள்ளது.
.
ரஷ்யாவின் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய உரையில், பூட்டின் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நலமான உறவு எதையும் தான் தற்போதைக்கு எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார். நிலைமை நலமாக அமையும் என்று தாம் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்ததாகவும் ஆனால் தற்போது அந்த நம்பிக்கையை இழந்துள்ளதாகவும் பூட்டின் கூறியுள்ளார்.
.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் Senate ரஷ்யா மீதான மேலதிக தடை சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி இருந்தது. இந்த சட்டம் ஜனாதிபதி டிரம்ப் ரஷ்யா மீதான தடைகளை சுயாதீனமாக இரத்து செய்வதையும் தடை செய்துள்ளது. அதாவது டிரம்ப் விரும்பினாலும் அமெரிக்கா ரஷ்யா மீதான தடைகளை இரத்து செய்ய முடியாது.
.
அத்துடன் ரஷ்யா அங்குள்ள அமெரிக்காவின் இரண்டு கட்டிடங்களையும் முடக்கி வைத்துள்ளது.
.
கடந்த டிசம்பர் மாதத்தில் அப்போதைய ஜனாதிபதி ஒபாமா 35 ரஷ்ய இராசதந்திரிகளை நாடுகடத்தியும் இரண்டு கட்டங்களை முடக்கியும் இருந்தார்.
.