Mosul நகரை மீட்டது ஈராக் அரசு

Iraq

கடந்த ஒன்பது மாதங்களாக நடாத்திய போரின்பின், இன்று ஞாயிறு ஈராக்கிய படைகள் ஈராக்கின் மோசுல் (Mosul) நகருள் நுழைந்துள்ளது. இதுவரை மோசுல் நகர் IS குழுவின் தலைநகர் போலவே செயல்பட்டு வந்திருந்தது. இந்நகரில், Tigris நகருக்கு மேற்கு பகுதியின் பல பாகங்கள் குண்டுகளுக்கு முற்றாக இரையாகி உள்ளன.
.
இந்த வெற்றியை பாராட்ட ஈராக்கின் பிரதமர் Haider al-Abadi இன்று ஞாயிறு மோசுல் சென்றுள்ளார்.
.
ஈராக்கின் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் Sami al-Aradi தான் கடந்த 40 வருடங்களாக ஈராக்கின் படையில் பணிபுரிவதாகவும், மோசுல் நகருக்கான போரைப்போல் வேறு ஒரு போரையும் தான் சந்திக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
.
ஈராக் அரசுக்கு உதவியாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, Kurdish குழுக்கள், சியா குழுக்கள் போன்ற தரப்புகளும் போரில் பங்காற்றி வந்துள்ளன. போரின் பின் இவர்கள் தம்முள் மோதுவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு.
.

==