இன்று நாம் பயன்படுத்தும் பெற்ரோலில் இயங்கும் (internal combustion) கார் போன்ற வாகனங்களுக்கு வயது 100க்கும் அதிகம். ஆனால் தற்போது அவ்வகை வாகனங்களுக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது போல் தெரிகிறது.
சீன உரிமை கொண்டதும், சுவீடனில் தலைமையகத்தையும் கொண்டதுமான Volvo என்ற வாகன தயாரிப்பு நிறுவம் 2019 ஆம் ஆண்டுமுதல் தாம் பெற்ரோலில் இயங்கும் கார் போன்ற குடும்ப வாகனங்களை தயாரிக்கப்போவது இல்லை என்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் 2019 ஆண்டின் பின் மின்னில் இயங்கும் கார்களை (electric cars) மட்டுமே தாம் தயாரிக்கவுள்ளதாக கூறியுள்ளது.
.
.
அதேவேளை பிரான்ஸ் 2040 ஆம் ஆண்டுமுதல் பெற்ரோல், டீசல் வாகனங்கள் அங்கு விற்பனை செய்வதை தடை செய்யவுள்ளதாகவும் வியாழக்கிழமை கூறியுள்ளது. இந்த அறிவிப்பை பிரான்சின் சூழலுக்கு பொறுப்பான அமைச்சர் Nicolas Hulot வெளியிட்டு உள்ளார்.
.
.
2040 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்படும் புதிய வாக்கங்கள் சுமார் 15 வருடம் சேவையில் இருக்கும் என்பதால், 2055 ஆம் ஆண்டுவரை வரை அங்கு பெற்ரோல், டீசலுக்கு சந்தை இருக்கும்.
.
.
அடுத்துவரும் வருடங்களில் மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவிலேயே electric கார்களுக்கு அதிக சந்தை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.
.
சூழலை பாதுகாக்க காபன் (Carbon) மூலமான எரிபொருளில் இருந்து தப்பி ஓடும் வாகன உலகம் எங்கிருந்து electric கார்களுக்கான மின்னை பெறும் என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை. அநேகமாக அதிகரித்த மின் தேவையை அணுமின் நிலையங்களே பூர்த்தி செய்யலாம். அவ்வாறாயின் அவ்வகை அணுமின் நிலையங்களில் இருந்து வரும் பாதிப்புகள் எவ்வாறு எம்மை பாதிக்கும் என்பதுவும் தெரியாத ஒன்று.
.