இஸ்ரேல் போகிறார் இந்திய பிரதமர் மோதி

Modi

இந்திய பிரதமர் மோதி ஜூலை 4 ஆம் திகதி இஸ்ரேல் செல்லவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேல் செல்வது இதுவே முதல் தடவை. நீண்ட காலமாக பலஸ்தீனருக்கு ஆதரவாக இருந்து வந்த இந்தியா, தற்போது அமெரிக்காவின் தயவையும், அதை நிறைவேற்ற இஸ்ரேலின் ஆதரவையும் நாடுகிறது.
.
தனது இஸ்ரேல் பயணத்தின்போது மோதி இஸ்ரேல் பிரதமர் நெற்ரன்யாஹூவை (Netanyahu) சந்திப்பார்.
.
அண்மை காலங்களில் இஸ்ரேல் இந்தியாவுக்கு பெருமளவு ஆயுதங்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே $2 பில்லியன் வெகுமதியாக ஆயுத விற்பனை உடன்படிக்கை ஒன்று ஒப்பமிடப்பட்டிருந்தது.
.

இந்த பயணத்தின்போது மோதி பாலஸ்தீனியார் பகுதிகளுக்கு செல்வாரா என்று அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
.