அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்திக்க இந்திய பிரதமர் வாஷிங்டன் வந்துள்ளார். இந்தியா மீது டிரம்ப் பெருமளவு பொருளாதார குற்றச்சாட்டுக்களை ஏவிய நிலையிலேயே மோதி அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
.
.
சீனா மீதும் டிரம்ப் பெரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருந்திருந்தாலும், சீன ஜனாதிபதியின் அமெரிக்க பயணத்தின் சீனா மீதான பல குற்றச்சாட்டுக்களை டிரம்ப் கைவிட்டு இருந்தார். உதாரணமாக சீனா, தனது பொருளாதார நலன்களுக்காக, தனது நாணயத்தை கட்டுபப்டுத்தும் நாடு (currency manipulator) என்றிருந்தார் டிரம்ப். ஆனால் சீன ஜனாதிபதியின் டிரம்புடனான சந்திப்பின் மறுநாளே டிரம்ப் தனது கூற்றில் சீனா ஒரு currency manipulator அல்ல என்றிருந்தார்.
.
.
இந்தியாவின் மோதி எவ்வாறு டிரம்பை கையாள்வார் என்பதை வரும் நாட்கள் கூறும், 2000 ஆம் ஆண்டில் இந்திய-அமெரிக்க வர்த்தகம் $19 பில்லியன் ஆக மட்டுமே இருந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டில் இந்நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் $115 பில்லியன் ஆக உயர்ந்தது. இதில் பெருநன்மை இந்தியாவுக்கே. அதனால் இந்தியாவை சாடியுள்ளார் டிரம்ப். குறிப்பாக இந்தியாவின் high-tech துறை அமெரிக்காவின் வேலைகளை பறிப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
.
.
Paris Climate Accord பங்குபற்றலுக்கு பிரதியுபகாரமாக இந்தியா billions of billions பெற்றுள்ளதாக டிரம்ப் இந்தியா மீது குற்றம் சாடியிருந்தார். அதேவேளை டிரம்ப் Paris திட்டத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.
.
.
டிரம்ப் சந்தோசமாக இந்தியாவுக்கான சில ஆயுத விற்பணைகளை அறிவிக்கக்கூடும். அவ்வகை அறிவிப்புகள் டிரம்பின் ஆதரவாளர்களை மகிமைப்படுத்தும்.