இஸ்ரேல் தென் ஆபிரிக்கா வெள்ளையரின் ஆட்சியின் கீழ் கொண்டிருந்தது போலான apartheid ஆட்சியை நோக்கி செல்கிறது என்றுள்ளார் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் Ehud Barak. ஜெர்மன் தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே Barak இவ்வாறு கூறியுள்ளார்.
.
.
யூதருக்கு, அரபு நாட்டவர்க்கும் இடையே இடம்பெற்ற Six-Day யுத்தத்தின் 50 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு Tim Sebastian நடாத்திய நேர்காணலுக்கே முன்னாள் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
.
.
Netanyahu தலைமயிலான தற்போதைய இஸ்ரேல் அரசு இஸ்ரேல்-பாலஸ்தான் என்ற இரு-நாட்டு (two-state) அணுகுமுறையை விட்டு விலகியது மிகவும் ஆபத்தானது என்றும் முன்னாள் பிரதமர் கூறியுள்ளார்.
.
.
டிரம்பினதும், ஒரு யூதரான அவரின் மகளின் கணவரின் ஆதரவும் இருக்கும் நிலையில் Netanyahu two-state கொள்கையை கைவிட்டு உள்ளார். அனால் பதிலாக என்ன கொள்கையை கொண்டுள்ளார் என்றும் Netanyahu குறிப்பிடவில்லை. அதே நேரம் தொடர்ந்தும் கைக்கொண்ட நிலங்களில் யூதர்களுக்கு வீடுகளை Netanyahu கட்டி வருகிறார்.
.
Barak பிரதமர் ஆக இருத்த காலத்தில் ஏற்பட்ட பாலஸ்தீனியர் மரணங்கள் பற்றி கூறுகையில், தனக்கு யூதரின் பாதுகாப்பே முதல் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.
.