ஆட்சியில் உள்ள இந்துவாத இந்திய மத்திய அரசு கடந்த கிழமை இறைச்சிக்கு மாடுகள், எருமைகள், மற்றும் சில மிருகங்களை விற்பனை செய்தலையும், கொள்வனவு செய்தலையும் சட்டப்படி தடை செய்திருந்தது. ஆனால் சில மாநிலங்கள், குறிப்பாக இறைச்சி மாட்டு வர்த்தகத்தில் உள்ள மாநிலங்கள், இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
.
.
தமிழ்நாட்டில் உள்ள Madras High Court இந்த மத்திய அரசு சட்டத்தை 4 கிழமைகளுக்கு இடைநிறுத்தம் செய்துள்ளது. இந்த சட்டத்தின் நியாயத்தை ஆராய இந்த 4 கிழமைகளையும் தமிழ்நாடு நீதிமன்றம் பயன்படுத்தும். சென்னையில் உள்ள Indian Institute of Technologyயில் இடம்பெற்ற மாட்டு இறைச்சி உண்ணும் விழாவில் சுமார் 80 மாணவர்கள் பங்கு கொண்டிருந்தனர்.
.
.
மேற்படி சட்டம் நடைமுறை செய்யப்பட்டபின், கேரளா மாநிலத்தில் எதிர்ப்பு கூட்டம் ஒன்று பொது இடத்தில் வைத்து மாடு ஒன்றை கொலை செய்து இருந்தது. அங்கு சுமார் 300 மாட்டு இறைச்சி விழாக்களும் இடம்பெற்றன.
.
அதேவேளை இராஜஸ்தான் மாநில High Court மாடுகள் இந்தியாவின் தேசிய மிருகமாக அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்று கூறியுள்ளது. அத்துடன் மாட்டு கொலைகளுக்கான தற்போதைய 3 வருட சிறை தண்டனை ஆயுள் தண்டனையாக அதிகரிக்கப்படல் வேண்டும் என்றும் கூறியுள்ளது.
.
.
கேரளா, மேற்கு வங்காளம், மஹாயான, பாண்டுசேரி ஆகிய இடங்கள் உணவுக்கு மாடுகளை கொலை செய்வதை சட்டப்படி அனுமதித்து உள்ளன.
.
.
இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் பெருமளவில் மாட்டு இறைச்சியை உண்கின்றனர். ஆனால் மிக பெருமளவு மாட்டு இறைச்சி இந்தியாவில் இருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்திய மாட்டு இறைச்சி வர்த்தக பெறுமதி சுமார் $4 பில்லியன் என்று கருதப்படுகிறது. அத்துடன் சுமார் 2.2 மில்லியன் மக்கள் இந்த துறையில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளார். மாட்டு தோல் வர்த்தகமும் இதில் அடங்கும்.
.
.
உலகத்தில் அதிக மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாவே. பாலுக்கு அதிக கேள்வி உள்ள நாட்டில் மாட்டு வளர்ப்பு பெருகுவது அங்கு மலிந்த விலையில் இறைச்சிக்கு மாடுகள் கிடைக்க வழி செய்கின்றது.
.