பிரான்சில் நடுநிலைவாதி Macron ஜனாதிபதியானார்

Macron

இன்று ஞாயிறு இடம்பெற்ற பிரென்சு ஜனாதிபதி தேர்தலில் முற்றாக வலதுசாரியோ அன்றி, இடதுசாரியோ அல்லாத நடுநிலை பேணும் Emmanuel Macron ஜனாதிபதியான தெரிவு செய்யப்பட்டு உள்ளார். இவருக்கு சுமார் 65% வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு எதிராக போட்டியிட்ட கடும்போக்கு வலதுசாரியான Marine Le Penக்கு சுமார் 35% வாக்குகள் மட்டுமே கிடைக்கும்.
.
Macron ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிரான்ஸையே விரும்பியவர். இவர் புதிய குடிவராவாளர்களையும் அன்புடன் வரவேற்பவர். 1977 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒரு முதலீட்டு வாங்கியாளர் (investment banker) ஆவார். திருமணமான இவரின் மனைவிக்கு இவரைவிட 24 வயதுகள் அதிகம். இவரின் மனைவி 1953 ஆம் ஆண்டு பிறந்தவர்.
.
Le Pen அமெரிக்காவின் டிரம்ப் பாணியில் அரசை அமைக்க விரும்பியவர். Le Pen ஐரோப்பிய ஒன்றியம் மீது எந்தவித நம்பிக்கையையும் கொண்டிராதவர். அகதிகள் மீதும் வெறுப்பு கொண்டவர்.
.
அண்மையில் அஸ்ரியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இடம்பெற்ற தேர்தல்களிலும் டிரம்ப் பாணியில் கொள்கை கொண்டோர் தோல்வி அடைந்திருந்தார்.
.

ஐரோப்பிய சார்பு வேட்பாளர் பிரான்சில் வென்றது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியாவுக்கு பாதகமான விடயம். பலமான ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவையிட்டு பெரிதும் அலட்டிக்கொள்ளாது செயல்படும்.
.