தலபானுக்கு ரஷ்யா உதவி, என்கிறது அமெரிக்கா

Afhanistan

ஆப்கானித்தானில் அமெரிக்க/NATO படைகளுக்கு எதிராக போராடிவரும் தலபானுக்கு (Taliban) ரஷ்யா உதவுகிறது என்கிறது அமெரிக்கா. திங்கள்கிழமை ஆப்கானித்தானில் உள்ள அமெரிக்க/NATOபடைகளின் தளபதி ஜெனரல் John Nicholson இச்செய்தியை தான் பொய் என்று நிரூப்பிக்கவில்லை (I am not refuting that) என்றுளார்.
.
அதேவேளை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Matti, செய்தி உண்மை என்றால் அது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்றுளார்.
.
இச்செய்தி, ரஷ்யா தலபானுக்கு ஆயுத, பண உதவிகளை செய்கிறது என்கிறது. 1980 ஆம் ஆண்டுகளில் இதே தலபானுக்கு, ரஷ்யா  ஆப்கானித்தானை ஆக்கிரமித்த காலத்தில், அமெரிக்கா பண, ஆயுத உதவிகளை பாகிஸ்தான் மூலம் வழங்கி இருந்தது. அப்போது CIA ஏவுகணைகளைக்கூட தலபானுக்கு வழங்கி இருந்தது.
.
ஆப்கானிஸ்தானில் தலபான்களின் பலம் அண்மைக்காலங்களில் அதிகரித்து வந்துள்ளது. அண்மையில் பல பெரும் தாக்குதல்கள் தலபான்களால் தலைநகர் காபூலில் நடாத்தப்பட்டன.
.