உத்தரபிரதேச மாநிலத்தில் BJP பெருவெற்றி

India

இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி (BJP) அண்மையில் இடம்பெற்ற உத்தரபிரதேச மாநில தேர்தலில் பெருவெற்றி அடைந்துள்ளது. மொத்தம் 403 ஆசனங்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்து தேர்தலில் BJP 312 ஆசனங்களை வென்றுள்ளது. இது, 7 ஆசனங்களை மட்டும் வென்ற, காங்கிரஸ் கடைசிக்கு பலத்த அடியாக உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பிரதமர் மோதிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் கருதலாம்.
.
கடந்த மாத இறுதியிலும், இந்த மாத ஆரம்பத்திலும் 5 இந்திய மாநிலங்களில் மாநில தேர்தல்கள் இடம்பெற்றன.
.
மொத்தம் 70 ஆசனங்களை கொண்ட இமயமலை அடிவாரத்து உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்திலும் BJP 56 இடங்களை வென்றுள்ளது.
.
புஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் பெரும்பான்மை வெற்றியை அடைந்துள்ளது. மொத்தம் 117 ஆசங்களை கொண்ட புஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் 77 ஆசனங்களை வென்றுள்ளது.
.

கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் BJP கட்சியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ பெரும்பான்மையை அடைய முடியவில்லை. அதனால் இவற்றுள் ஒன்று உள்ளூர் கட்சி ஒன்றுடன் இணைந்தே ஆட்சி அமைக்க நேரிடும்.
.