அமெரிக்கர்களுக்கு ஐரோப்பா செல்ல விசா?

EU

ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பல ஐரோப்பிய ஒன்றிய (EU) நாட்டவர் அமெரிக்கா செல்ல முன்கூட்டியே விசா எடுத்தல் அவசியம் இல்லை. அதேபோல் அமெரிக்கர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்ல முன்கூட்டியே விசா எடுத்தலும் அவசியம் இல்லை. ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான Bulgaria, Croatia, Cyprus, Poland, Romania ஆகிய நாட்டவர் அமெரிக்கா செல்ல முன்கூட்டியே விசா எடுத்தல் அவசியம். இதை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் தற்போது முனைகிறது.
.
இந்த மாதம் 2ம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றம் செடுத்துக்கொண்ட தீர்மானம் ஒன்றின்படி, ஏனைய ஐரோப்பிய நாட்டவரை போல், Bulgaria, Croatia, Cyprus, Poland, Romania ஆகிய நாட்டவரையும் முன் விசா இன்றி அமெரிக்காவுள் அனுமதிக்க வேண்டும். இல்லையேல் அமெரிக்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு விசா எடுத்தே வரவேண்டும். இந்த தீர்மானம் ஒரு சட்டம் இல்லை என்றாலும் இருபகுதிகளுக்கும் இடையில் உருவான முறுகல் நிலை நன்கு வெளிப்பட்டு உள்ளது.
.
ஜப்பானும், ஆஸ்ரேலியாவும் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்க்கும் முன் விசா இன்றி பயணிக்க உரிமை வழங்கி உள்ளன. கனடாவும் இந்த வருட இறுதியில் இருந்து அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாட்டவரும் முன் விசா இன்றி பயணிக்க உரிமை வழங்கவுள்ளது.
.

வரும் ஜூன் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் மாநாடு ஒன்று இடம்பெற உள்ளது. அதில் இந்த விடயம் ஆராயப்படும். சார்பான தீர்வு கிடையாதுவிடின் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கர்களுக்கு தற்காலிக விசாவை நடைமுறைப்படுத்த முடியும்.
.