உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை 7:36 மணிக்கு வடகொரியா 4 நீண்டதூரம் செல்லும் ஏவுகணைகளை (ICMB) ஏவியுள்ளது. இவை சுமார் 1,000 km தூரம் சென்று ஜப்பான் கடலுள் வீழ்ந்துள்ளன. தனது கரையோரத்தில் இருந்து 300 km தொலைவில் உள்ள கடலில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்ததாக ஜப்பான் கூறியுள்ளது.
.
.
அமெரிக்காவும், வடகொரியாவும் இணைந்து நடாத்தும் வருடாந்த இராணுவ பயிற்சிகள் தற்போது நடைபெறும் நேரத்திலேயே வடகொரியா தனது ஏவுகணை பயிற்சியை நடாத்தி உள்ளது. அமெரிக்க-வடகொரிய இராணுவ பயிற்சி இந்த மாதம் 1ம் திகதி முதல் அடுத்தமாதம் 30ம் திகதிவரை நடைபெறும். இந்த பயிற்சிக்கு வடகொரியா மட்டுமன்றி, சீனாவும் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.
.
.
முற்காலங்களில் வடகொரியா ஏவுகணைகளை ஏவும்போது, ஒபாமா ஒரு பலவீனமானவர் என்றும் அதனால் தான் வடகொரியா ஏவுகணைகளை ஏவுகிறது என்றும், தான் பதவிக்கு வந்தால் வடகொரியா இவ்வாறு செய்ய துணியாது என்றும் டிரம்ப் கூறியிருந்தார். அனால் தற்போது ஜனாதிபதி பதவியில் உள்ள டிரம்ப் இவ்விடயத்தில் அமைதியாக உள்ளார்.
.
.
வடகொரியா மட்டுமன்றி ஈரானும் டிரம்ப் பதவிக்கு வந்தபின் சில ஏவுகணைகள் பரிசோதனை செய்துள்ளது. அப்போதும் டிரம்ப் பெரிதாக எதுவும் செய்திருக்கவில்லை. டிரம்ப் தற்போது பல உள்நாட்டு முரண்பாடுகளுள் மூழ்கியுள்ளார்.
.