பிரான்சின் கப்பலான FS Mistral இலங்கை, சிங்கப்பூர், வியட்நாம், ஜப்பான், குஆம் (Guam), அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு 5 மாத பயணம் ஒன்றை மேற்கொண்டடுள்ளது. இந்த கப்பலில் 60 பிரித்தானிய படையினரும் தங்களது இரண்டு Merlin MK3 வகை ஹெலிகளுடன் இணைந்துள்ளார்.
.
.
Mistral வகை கப்பல்கள் தரையிறங்க துறைமுகம்கள் அவசியம் இல்லை. Amphibious என்ற இவ்வகை கப்பல்கள் சாதாரண கடற்கரையில் தரையிறங்கும் வசதி கொண்டவை. விமான ஓடுபாதை இல்லாத இந்த கப்பலில் யுத்த விமானங்கள் இல்லாதுவிடினும், இதில் 16 ஹெலிகள், 70 சிறிய அல்லது 40 பெரிய Tankகளுடன் சுமார் 450 படையினர் பயணிக்க முடியும்.
.
.
உலகில் மொத்தம் 5 Mistral வகை யுத்த கப்பல்கள் உண்டு. அவற்றுள் 3 பிரான்சின் கையில் உள்ளன. மேழும் 2 ரஷ்யாவுக்காக தயாரிக்கப்பட்டு இருந்திருந்தாலும், ரஷ்யாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் பின்னர் உருவான மோதல் காரணமாக விற்பனை இடைநிறுத்தப்பட்டு இருந்தது.
.
.
இந்த பயணத்தின்போது பிரித்தானிய படைகளும், பிரான்சின் படைகளும் இணைந்து இயங்கலாம் என்று நிரூபிக்கப்படும்.
.