இலங்கை கூட்டுத்தாபனங்களுள் சீர்த்திருத்தம்

SriLanka

பெரும் நட்டத்தில் இயங்கும் ஐந்து இலங்கை கூட்டுத்தாபனங்களை சீர்திருத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான Statement of Corporate Intent இன்று புதன்கிழமை அரசால் அங்கீகரிக்கப்படுள்ளது. இவ்வாறு மேற்படி கூட்டுத்தாபனங்களை சீர்திருத்தி இலாபகரமாக மாற்றும்படி IMF கடந்த வருடம் கடன் வழங்கலின் போது பணித்திருந்தது.
.
இலங்கை விமான சேவை (Srilankan), இலங்கை மின்சார கூட்டுத்தாபனம், இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம், இலங்கை துறைமுகம் ஆகியன இவற்றுள் அடங்கும். இவை தற்போது மொத்தம் $7.93 பில்லியன் கடனில் உள்ளன. இலங்கை விமான சேவை (Srilankan) மட்டும் $3.25 பில்லியன் கடனில் உள்ளது.
.
2016 ஆம் ஆண்டில் IMF இலங்கைக்கு $1.5 பில்லியன் கடன் வழங்க இங்கி இருந்தது. ஆனால் அக்கடனுக்கு நிபந்தனையாக மேற்படி அரச கூட்டுத்தாபன சீராக்கல்களை கூறியிருந்தது.
.

தனக்குரிய 99-வருட அம்பாந்தோட்டை நில குத்தகை விவகாரம் இழுபட்டு செல்வதால், சீனா தென் துறைமுகத்துக்கான $1.1 குத்தகை கொடுப்பானவையும் நிறுத்தி வைத்துள்ளது. அதனால் பண நெருக்கடிக்கு உள்ளான இலங்கை அரசின் கொள்கை IMFமிடம் அல்லது சீனாவிடம், அல்லது இரு பகுயிடமும் சரண் அடைய நேரிட்டு உள்ளது.
.