Djiboutiயில் அமெரிக்க முகாம் அருகே சீன முகாம்

DjiboutiBase

ஆபிரிக்க கண்டத்தில் உள்ள ஒரேயொரு அமெரிக்க நிரந்தர படை முகாம் Djibouti என்ற சிறிய நாட்டில் உள்ளது. தற்போது இந்த அமெரிக்க முகாமுக்கு அண்மையில், சுமார் 12 km தொலைவில், சீனா தனது 90 ஏக்கர் பரப்பளவு கொண்ட கடற்படை முகாம் ஒன்றை அமைக்கும் பணியில் வேகமாக ஈடுபாட்டு உள்ளது. சீனாவின் எல்லைகளுக்கு அப்பால் அமையப்போகும் முதலாவது சீன படைமுகாம் இதுவாகும்.
.
நியூ யோர்க் நகரில் நடந்த 9/11 தாக்குதலின் பின், மத்தியகிழக்கு ஆயுத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைளை மேற்கொள்ள வசதியாக இங்கு அமெரிக்கா தனது Camp Lemonnier என்ற முகாமை அமைத்தது. மத்தியகிழக்கு மற்றும் ஆபிரிக்கா பகுதிகளில் அமெரிக்கா நடாத்தும் வேவு விமான (drone) பணிகளும் இங்கிருந்து செய்யப்படுகின்றன.
.
துறைமுகத்தை பயன்படுத்தும் சீனா வருடம் ஒன்றுக்கு $20 மில்லியன் குத்தகை செலுத்தும். அதேவேளை சீனா பல பில்லியன் டொலர்கள் Djiboutiக்கு கடனாகவும் வழங்கி உள்ளது. Djiboutiயின் GDPயில் 60% சீனா வழங்கும் கடன் என்று கூறப்படுகிறது. வரும் காலத்தில் கடனையும், வட்டியையும் செலுத்த முடியாதுவிடின், Djibouti சீனாவுக்கு கட்டுப்பட நேரிடும்.
.
1977 ஆம் ஆண்டுவரை பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்து பின் சுதந்திரமான Djiboutiயில் ஒரு பிரஞ்சு படை முகாமும் உண்டு. அத்துடன் இங்கு ஜப்பான், இத்தாலி, பிரித்தானிய போன்ற வேறு சில நாடுகளின் சிறு முகாம்களும் உண்டு.
.

இவ்வாறு சீனா முகாம் அமைக்க முனைந்ததை அமெரிக்கா முதலில் அறிந்து இருக்கவில்லையாம். இந்த விவகாரத்தில் அவர்கள் தாம் blindsided என்கிறார்கள். இரண்டு வருடங்களின் முன் ரஷ்யாவும் இவ்வாறு இங்கு முகாம் அமைக்க முனைத்தபோது அமெரிக்கா அதை தடுத்து இருந்ததாம்.
.