வடக்கு-கிழக்கு இணைய இந்தியா வலியுறுத்தாது

SriLanka

இலங்கையின் தமிழர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவேண்டும் என்று இந்தியா வலியுறுத்த மாட்டாது என்று இந்தியாவின் வெளிவகார செயலாளர் S. Jaishankar கூறியதாக New Indian Express செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த விபரத்தை Jaishankar இன்று திங்கள்கிழமை TNAக்கு கூறியுள்ளார்.
.
1987 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தப்படி வடக்கும், கிழக்கும் இணைக்கப்படல் வேண்டும். ஆனால் இந்தியா அந்த கொள்கையை கைவிட்டு உள்ளது. 1987 இல் பலமான இஸ்லாமிய கட்சி என்று ஒன்று கிழக்கில் இருந்திருக்கவில்லை. அனால் தற்போது நிலைமை அப்படியல்ல.
.
கிழக்கு மாகாணம் தனி மாகாணமாக இருப்பின், இஸ்லாமியர் 35% பலத்துடன் இருப்பர். ஆனால் வடக்கு-கிழக்கு இணைந்த மாகாணத்தில் இஸ்லாமியர் 12% பலத்துடனேயே இருப்பார்.
.

1987 ஆம் ஆண்டில் இருத்த இலங்கை அரசியல் நிலைக்கும், தற்போது உள்ள அரசியல் நிலைக்கும் பெரும் வேறுபாடு உண்டு என்று இந்தியா கருதுகிறது. இந்த ஒரு விடயத்துக்காக மற்றைய எல்லா விடயங்களையும் பின்போட இந்தியா விரும்பவில்லை.
.