Samsung தலைமை Lee Jae-yong கைது

LeeJaeYong

தென்கொரியாவின் Samsung நிறுவனத்தை ஆரம்பித்தவரின் பேரனான Lee Jae-yong தென்கொரிய அரசால் கைது செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய தென்கொரிய ஜனாதிபதி Park Geun-hyeக்கும் அவருடைய நண்பி Choi Soon-silக்கும் எதிராக செய்யப்படும் ஊழல் விசாரணைகள் தொடர்பாகவே Lee Jae-yongயம் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் தற்போது Samsung நிறுவனத்தின் Vice Chairman ஆக பதவியில் உள்ளார்.
.
இவர் Samsung நிறுவனத்துக்கு பயன்படும் வகையில் சட்டங்களை அமைக்க, ஜனாதிபதியின் நண்பிக்கு $38 மில்லியன் பணம் வழங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
.
Lee Jae-yongயின் மொத்த சொத்துக்கள் சுமார் $8 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
.

உலகத்திலேயே அதிகம் smart phoneகளை விற்பனை செய்யும் நிறுவனம் சாம்சங் ஆகும். 2014 ஆம் ஆண்டில் இதன் மொத்த வருமானம் சுமார் $305 பில்லியன் ஆகவும், மொத்த இலாபம் $22.1 பில்லியன் ஆகவும் இருந்தது. உலகம் எங்கும் சுமார் 500,000 ஊழியர்கள் Samsungகில் பணிபுரிகின்றனர்.
.