$30 பில்லியனுக்கு சீன Semiconductor நிறுவனம்

Tsinghua

சீன அரச ஆதரவுடன் இயங்கும் Tsinghua Unigroup என்ற தொழில்நுட்ப நிறுவனம் $30 பில்லியன் செலவில் புதியதோர் semiconductor தயாரிப்பு நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளது. இந்த வகை semiconductor chipகள் computers, smart phones, digital camera போன்ற உபகரணங்களில் பயன்படுத்தப்படும்.
.
தற்போது உலக அளவில் இவ்வகை பொருட்க்களுக்கான சந்தையை அமெரிக்காவின் Intel, Qualcomm போன்ற நிறுவனங்களே ஆக்கிரமித்து வந்தன.
.
கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி விஞ்ஞான ஆய்வு அமைப்பு ஒன்று semiconductor உலகில் அமெரிக்கா கொண்டுள்ள ஆளுமையை சீனா முறியடிக்க உள்ளதாக கூறி இருந்தது.
.
இவ்வாறு போட்டியாக சீனாவின் Tsinghua Unigroup சொந்த தயாரிப்பில் இறங்குவது இது இரண்டாவது தடவை. அண்மையில் Tsinghua Unigroup அமெரிக்காவின் Micron Technology மற்றும் Sandisk ஆகிய memory chip நிறுவனங்களை கொள்வனவு செய்ய முனைந்தபோது, அமெரிக்க அரசு அதை தடுத்து இருந்தது. உடனே Tsinghua Unigroup $24 பில்லியனுக்கு Wuhan என்ற இடத்தில் memory chip நிறுவனத்தை ஆரம்பித்து இருந்தது.
.